அமேசான் பிரைம் ஸ்ட்ரீமிங் சேவை சர்வதேச நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் தொடங்கி, இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அமேசான் பிரைமில் வீடியோக்களை வாடகைக்கு எடுப்பது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பரபரப்பான சூழல் காரணமாக எப்போதாவது பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்டிருந்தால், நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அமேசான் பிரைமில் உள்ள ‘மூவி ரெண்டல்’ என்ற ஆப்ஷன் நீங்கள் தவறவிட்ட அல்லது சமீபத்திய திரைப்படங்களை வாடகை முறையில் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. 1920களின் கிளாசிக் படங்கள் முதல் சமீபத்திய 2025-களின் பிளாக்பஸ்டர்கள் வரை அனைத்து படங்களையும் வாடகை முறையில் பார்க்கலாம்.

primevideo.com என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு உங்கள் மொபைல் நம்பர் அல்லது அமேசான் கணக்கின் தரவுகளை பதிவிட்டு உள் நுழைய வேண்டும். நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை தேர்ந்தெடுக்க வேண்டும். தலைப்பு, ஜானர், நடிகர் அல்லது இயக்குனர் மூலம் வீடியோக்களை தேர்ந்தெடுக்க சர்ச் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். வீடியோவில் விவரங்கள் இருக்கும் பக்கத்தை திறந்த பின்னர் ரெண்டல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வீடியோ இலவசமாக இருக்கும் பட்சத்தில் வாட்ச் நவ் அல்லது பிளே வீடியோ என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வீடியோவை பார்க்கலாம். இல்லையெனில் வீடியோவை வாடகைக்கு எடுப்பதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் பிரைம் வீடியோவிற்கு செக்யூரிட்டி பின் (Security Pin) கொடுத்திருந்தால் வாடகை எடுக்க அந்தப் பின்னை உள்ளிட வேண்டியது அவசியம். நீங்கள் தேர்ந்தெடுத்த வீடியோ பார்ப்பதற்கு தயாராக இருப்பதை கண்டறிய ‘மை ஸ்டஃப்’ (My Stuffs) என்பதை தேர்ந்தெடுத்து பர்ச்சேஸ் டேபை கிளிக் செய்யவும்.

நீங்கள் ஒரு திரைப்படத்தை வாடகைக்கு எடுத்தால் அதை பார்ப்பதற்கு 30 நாட்கள் கால அவகாசம் உண்டு. படம் பார்க்க ஆரம்பித்தவுடன் 48 மணி நேரத்திற்கு வரம்பற்ற சேவை வழங்கப்படும். 48 நேரம் முடிந்த பிறகு வாடகை காலாவதியாகிவிடும். அதாவது நீங்கள் வாடகைக்கு எடுத்த படத்தை, பார்க்கத் தொடங்கியதில் இருந்து பார்த்து முடிப்பதற்கு அதிகபட்சமாக 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது என அர்த்தம். இது மட்டுமல்லாமல் HD, SD உள்ளிட்ட குவாலிட்டியில் நீங்கள் படத்தை வாங்கவும் இந்த Rent ஆப்ஷன் அனுமதிக்கிறது.