பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  கடந்த மாதம்  மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆவியுடன் பேசியதில் சுஷாந்த் தெரிவித்த விசயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. 

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆவியுடன் பேசியதில் சுஷாந்த் தெரிவித்த விசயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது.

Scroll to load tweet…

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரது மரணம் குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் சுஷாந்தின் ஆவி பேசிய வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமரிக்காவை சேர்ந்த Steve Huff என்ற அமானுஷ்ய நபர் ஒருவர் இறந்த ஆவிகளுடன் பேசும் விசித்திரமான வேலையை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். இவரிடம் சுஷாந்தின் ரசிகர்கள் அவரது ஆவியுடன் பேசி எப்படி இறந்தார். இறப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து சில கேள்விகளை கேட்க சொல்லி கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து பல நுண் கருவிகளுடன் சுஷாந்தின் ஆவியிடம், நீங்கள் எப்படி இறந்தீர்கள் என கேட்டதற்கு சுஷாந்த் சிங் எனப்படும் அந்த குரல் " நான் கடவுளிடம் இருக்கிறேன். சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறேன். சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது, அவர்கள் நகங்களைக் கொண்டு வந்தார்கள், அது இப்போது முடிந்தது என்று கூறியுள்ளார். மேலும், நட்பு என்ற பெயரால் என்னை கொலை செய்து விட்டார்கள்.

நாம் இத்துடன் நிறத்திக்கொள்வது சிறந்தது” என அந்த குரல் கூற உடனே ஒரு பெண் குரல் " இது முடிந்தது" என கூறி முடிக்கின்றார். 
அந்த பெண் குரல் சுஷாந்தின் அம்மாவாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவரது செயல் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேசும் அந்த குரல் அப்படியே அச்சு அசல் சுஷாந்தின் குரலை போலவே உள்ளதாக பலரும் வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.