சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் விவேகம் படத்தன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ரூ.1.21 கோடி என்றும் இது கபாலியின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் விவேகம் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன் படி, தமிழ்நாடு - ரூ.16.95 கோடி

கர்நாடகா - ரூ.3.75 கோடி

கேரளா - ரூ.2.88 கோடி

ஆந்திரா - ரூ.1.75 கோடி

மொத்தம் - ரூ.25.83 கோடி

மேலும், அமெரிக்காவில் விவேகம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பிரபல வர்த்தக வல்லுநர் ரமேஷ் பாலா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், “விவேகம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் 260,579 டாலர்” என்று குறிப்பிட்டுள்ளார்