ஒரு மனுஷன் எத்தனை முறைதான் காப்பாற்றி விடுவாரோ? முன்னணி ஹீரோக்களை அணுகி, ‘கைதூக்கி விடுங்க’ என்று கேட்பது நலிந்த சினிமா நிறுவனங்களின் வழக்கம்தான்.

இப்பவும் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி விஜய்யை நெருக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் மெர்சல் படத்தை தமிழக முழுக்க வெளியிடுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் க்யூவில் நின்றபோதும் விஜய்யின் ரெகமன்டேஷனில் உள்ளே வந்தார் இவர். முரளியின் அனுபவமின்மை காரணமாக ரிலீஸ் நேரத்தில் கடும் போராட்டம். இதற்கப்புறமும் உதவ வேண்டும் என்று முரளி விஜய் நெருக்குவதுதான் காமெடி.

இவர் போன்ற பெரிய ஸ்டார்கள் கை கொடுத்தாலொழிய பழைய இடத்தை பிடிப்பதும் கஷ்டம்தான். ஒருவர் கேட்டால் சரி... வரிசை கட்டினால் விஜய்தான் என்ன செய்வார்? லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறதாம் சிவாஜி புரடக்ஷன்ஸ். விஜய்யின் டிக் லிஸ்ட்டில் பிரபு அண் பேமிலிக்கு இடமிருப்பதாகவும் தகவல்.