இயக்குநர் சுசி கணேசனுடன் மி டு’ யுத்தத்தை தொடங்கியிருக்கும் குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலை இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சந்திப்பில் சுசிகணேசனை மட்டும் வம்புக்கிழுப்பாரா அல்லது அவருடன் நட்பு கொண்டிருந்த பெரும் கூட்டம் தெருவுக்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

லீனா மணிமேகலை எழுத்தாளர், கவிஞர், குறும்பட இயக்குநர் உட்பட்ட இன்னும் ஏழெட்டு துறைகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருபவர். மி டு’ இயக்கம் துவங்குவதற்கு முன்பே லீனா தனது முகநூலில் பல ஆண்களின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி வந்திருக்கிறார்.

 

இவரது நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா தொடங்கி சுமார் 100 பிரபலங்கள் இருக்கிறார்கள். இப்போதைய கேள்வியே மேற்படி பார்ட்டிகளில் சுசி கணேசனுக்கு அடுத்த படியாக எத்தனை பேரை லீனா வெளிச்சத்துக்கு கொண்டுவரவிருக்கிறார் என்பதே.