சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட ஹெச்.வினோத் நேர்கொண்ட பார்வை படம் உருவான விதம் பற்றி, பல்வேறு தகவல்களை முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். நேற்று மாலை வெளியான இந்த படத்தின் ட்ரெய்லரை திரையுலக தமிழ் பிரபலங்கள் மட்டுமல்ல பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த டிரெய்லரில், அஜித்தின் தோற்றம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலாக இருக்கிறது. கருப்பு கோட்டில் ஸ்டைலும் தெறிக்கவிட்டிருப்பார். பிங்க் படத்தில் வரும் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் லுக்கை அசால்ட்டாக தனக்கே உரிய ஸ்டைலிஷான மேனரிஸத்தால் அடிச்சு தூக்கியுள்ளார்.

இந்நிலையில் அமிதாப்பின் ரோல் அஜித்துக்கு எப்படி செட் ஆனது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்; முதல் நாள் ஷூட்டிங் போவதற்கு முன் லுக் டெஸ்ட் ஒண்ணு வெச்சிருந்தோம். அப்போ வக்கீல் கோட் போட்டு, மேக்கப் இல்லாமல் நார்மலா வந்தார். தலையில தண்ணியை ஸ்பிரே பண்ணி தலை சீவிட்டு, ரெடி சார்னு ஃபர்ஸ்ட் லுக் போட்டோவுக்கு வந்து நின்னார்.

அப்போ ஒரு ஸ்னாப் எடுத்து ஸ்க்ரீன்ல பார்த்தோம். எல்லாருமே ஹேப்பி ஆயிட்டாங்க. அவரோட போட்டோவைப் பார்த்ததும் கேமராமேன் நீரவ்ஷா சார் என்னைப் பார்த்துச் சிரிச்சார். நானும் அவரைப் பார்த்துச் சிரிச்சேன். அவரோட அந்தப் போட்டோவைப் பார்த்ததும்தான் எனக்கு அபார நம்பிக்கை வந்துச்சு. மறுநாள்  ஷூட்டிங் கிளம்பிட்டோம். 

முதல் நாளே கோர்ட் காட்சிகள்தான் எடுத்தோம். அப்போ ஒட்டுமொத்த டீமும், அஜித் சார் எப்படி நடிக்கப்போறார்னு ஆவலோடு காத்துக்கிட்டிருந்தோம். அட்டகாசமான டயலாக் டெலிவரி, எமோஷ்னல், எனர்ஜிடிக் அமர்க்களமான பாடி லாங்குவேஜ்னு ஒட்டுமொத்த டீமையே கைதட்டி விசிலடிக்க வைத்துவிட்டார் என சொல்லி மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.