விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் சில எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி எதிர்க்கொண்டாலும், இந்த நிகழ்ச்சிக்காக பலர் அடிமையானது தான் உண்மை.

முதல் சீசன் பெற்ற வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று தொலைக்காட்சி தரப்பில் திட்டமிடப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் இந்தவிஷயம் எந்த அளவிற்கு உண்மை என இன்னும் தகவல் தெரியவில்லை.அனால், முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ரகசிய கல்யாணம் பண்ணிய ஹாட் நாயகி!

தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமாகி 'மழை', 'சிவாஜி', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'அழகிய தமிழ்மகன்', 'AAA' ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழ் சினிமாவின் ஹாட் நாயகியான இவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தார்.

சுமார் பத்து வருடங்களாக தென்னிந்தியா சினிமாவில் கொடிகட்டி பறந்த ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவ்-க்கும் இம்மாதம் இறுதியில் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் கடந்த வாரமே ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. மும்பையில் உள்ள அவரது வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்று திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.  

அரசியல் ஊழல் தோலுரிக்கும் கமல்!

22  வருடங்களுக்கு முன்பு லஞ்சம் என்ற ஒற்றை வையை வைத்துக் கொண்டு மிரட்டலாக வெளியானது இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் இரண்டு வேடங்களில் கலக்கியிருந்தார்.

ரசிகர்கள் மத்தியிலும் வசூலிலும் சக்கை போடு போட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஐதாரபாத் ப்லீம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியில் தொடங்கும் ‘இந்தியன் 2’வின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்கின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படம் தற்போதுள்ள சூழலுக்குத் தகுந்தவாறு அரசியல் சார்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்தப் படம் வங்கி மோசடி மற்றும் அரசியல் ஊழல் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித்தை சந்திப்பாரா உலகநாயகன்!

அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை மீண்டும் சிவாவே இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.

வரும் மார்ச் 23-ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்புகள் ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தல அஜித்தும் கமல்ஹாசனும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.