செம்ம ஜாலி டே -யான சன் டே! இன்று. எனவே ஏஸியாநெட் தமிழ் இணையதளத்தின் இன்று ஹீரோயின்ஸ் ஸ்பெஷல் செய்திகள்!.... 

* குஷ்புவின் கணவரன், ஹியூமர் படங்களின் இயக்குநருமான சுந்தர் சி, நிறைய ஹீரோயின்களை இயக்கியிருந்தாலும் கூட அவருக்கு மிக பிடித்தமான ஹீரோயின்கள் லிஸ்டில் முதலில் இருந்தவர் மீனா. ‘அந்தப் பொண்ணு ஸ்பாட்டில் இருந்தாலே அவ்வளவு லட்சுமிகரமா இருக்கும்.’ என்று ஓப்பனாக ஒரு பேட்டியில் சிலாகித்திருந்தார்.இப்போது மீனாவுடன், சுந்தரின் மனைவி குஷ்பு இணைந்து ரஜினியின் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்பாட் அரட்டையில் இதை மீனாவிடம் ஓப்பனாக சொல்லி, ‘இப்பவும் அவரு உங்க சினிமாவை டி.வி.யில் பார்த்தால் உட்கார்ந்து உட்கார்ந்து சைட் அடிப்பாரு!’ என்று சொல்ல, மீனா செக்கச் சிவந்திருக்கிறார். 

* சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவை தாறுமாறாக தெறிக்கவிட்ட நடிகை சிம்ரன்! அத்தனை ஹீரோக்களுடன் நடித்து, நெடும் காலம் நம்பர் 1 இடத்தில் இருந்தவர். அதன் பின் கல்யாணமாகி, இரண்டு மகன்களை பெற்று செட்டிலாகிவிட்டார். சிம்ரன் தனக்கென ஒரு ஃபேஸ்புக் பேஜ் வைத்திருக்கிறார். மற்ற நடிகைகளைப் போல் அட்மினை வைத்து மேனேஜ் செய்யாமல், தானே இதை நிர்வகிக்கிறார். முக்கிய நடிகர்களின் பிறந்தநாளின் போது அவர்களுடன் தான் எடுத்த பழைய போட்டோக்களைப் போட்டு, பழைய நினைவலைகளை சொல்லி வாழ்த்துவது சிம்ரனின் வழக்கம். சிம்ரன் ஒரு போஸ்ட்டை போட்டதுமே அடுத்த நொடியில் துவங்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் சில நாட்கள் வரை தொடரும். இன்னும் சிம்ரனுக்கு பேய்த்தனமான விசிறிகள் இருக்கிறார்கள். ரெகுலராக தன்னை ஃபாலோ செய்து, மிக டீஸன்டாகவும், ஈர்ப்பாகவும் கமெண்ட்ஸ் செய்யும் நபர்களுக்கு, இன்பாக்ஸில் போய் ’ஹலோ! தேங்க்ஸ்’ சொல்வது சிம்ரனின் வழக்கமாக இருக்கிறது. 

*  தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதோடு, ஒரு ஹீரோவுக்கான முக்கியத்துவத்துடன் வலம் வரும் நடிகைதான் அனுஷ்கா. தெலுங்கு அவருக்கு தாய்வீடு என்றாலும், தமிழ் சினிமாவில் அனுஷ் பேபிக்கென்று பெரிய இடமிருக்கிறது. இந்நிலையில் அவர் நடித்த ‘பாகமதி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். அதிலும் ஹீரோயினாக நடிக்க அவரையே கேட்டனர். ஆனால் ‘எனக்கு பாலிவுட் விருப்பமில்லை. சவுத் இந்தியாவே போதும்!’ என்று சொல்லி கெத்தாக அதை மறுத்துவிட்டார் அனுஷ். இந்த தகவல் பாலிவுட்டில் பரவ, மிறண்டுவிட்டனர். பாகுபலியின் இந்தி வெர்ஷன் செம்ம ஹிட்டு! அந்த வகையில் அனுஷை அங்கே அனைவரும் அறிவர். 

* நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் வரிசையாக இந்து கோவில்களை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருச்செந்தூர் கோயிலுக்கும் சென்றனர். அப்போது பா.ஜ.க.வின் மாஜி எம்.பி. ஒருவர் வாலண்டியராக அவரிடம் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறார். ’சினிமாவுல உச்சம் தொட்டுட்டீங்க. ஏன் நீங்க பா.ஜ.க. மாதிரியான இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்கு நல்லது பண்ணக்கூடாது?’ என்று சொல்லியிருக்கிறார். நயனும் அவருக்கு உரிய மரியாதை தந்து, ‘நிச்சயம் யோசிக்கிறேன் சார். பிரதமரை சந்திக்கலாம்னு கூட எனக்கு ஒரு விருப்பமிருக்குது.’ என்றாராம். அந்த பிரமுகரே பிரதமரிடம் நயனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தர இருக்கிறார்.

* நக்மா பிஸி ஹீரோயினாக இருந்தபோது, தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்த நடிகர் கவுண்ட மணி. அவர் இல்லாமல் முக்கிய ஹீரோக்களின் படங்கள் வராது, வந்தாலும் பெரிதாய் ஓடாது எனும் நிலை. காமெடியன் என்பதை தாண்டி கவுண்டமணிக்கு முக்கியத்துவம் அளித்து வந்தனர் இயக்குநர்கள். டூயட்டுகளிலும் கூட கவுண்டமணியை இடையில் செருகிவிட்டு, ஹீரோயின்களை அவரோடு ஆட வைத்தனர். ஆனால் ‘மேட்டுக்குடி’ படத்தில் அப்படி ஆட சொன்னதற்கு மறுத்து, இயக்குநரோடு கடும் சண்டை போட்டார் நக்மா. பின் வேறு வழியில்லாமல் ஆடினார். அந்தப் பாட்டு செம்ம ஹிட்டு. ஆனால் ஒரு ரகசியம் தெரியுமோ? இப்பவும் கவுண்டருடன் போன் தொடர்பில் இருக்கிறார் நக்மா. மனசு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் அவருகு போன் செய்து பேசி ரிலாக்ஸ் செய்வது நக்மாவின் வழக்கம்.