homemades against barani
பிஸ் பாஸ் ஹோம் மேட்ஸ் அனைவரும் நடிகர் பரணிதான் இந்த வாரம் வெளியேற்ற படுவார் என பெரிதும் எதிர்பார்த்தனர் ஆனால் பரணியையும் , ஓவியாவையும் காப்பாற்ற மாட்டும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ஓட்டுகள் வந்ததாக உலக நாயகன் கமலஹாசன் அறிவித்தார்.
அதே போல கஞ்சா கறுப்பிற்கு வெறும் 15 லட்சம் ஓட்டுகள் மட்டுமே வந்ததாக கூறி வெளியேற்ற பட்டார்.
இந்நிலையில், பரணியை பார்த்து கமலஹாசன் உங்களை காப்பாற்ற இத்தனை பேர் வாக்களித்துள்ளனர். இதனை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்ட போது.... பரணி செய்கைகள் மூலம் வாய்அடைத்து போய் அதிர்ச்சியில் தான் பதில் சொன்னார். மேலும் நான் பல லட்சம் மக்களை பார்க்கிறேன் எங்கு சென்றாலும் நான் நடந்து செல்வதால் அது சாத்தியம் என்பது போல பதிலளித்தார்.
ஆனால் எப்படியும் பரணி வெளியேற்றப்படுவார் என பெரிதும் எதிர்பார்த்த அனைவருடைய கோபமும், ஓட்டுமொத்தமாக பரணிமேல் திரும்பியதால் அனைவரும் அவரை ஒதுக்க ஆரமித்தனர். ஒருவர் கூட அவரிடம் முகம் கொடுத்து பேசவில்லை.
மேலும் அவர் கமலஹாசன் முன் நடித்தார் என ஆர்த்தி கூறினார் பரணி செய்தது போல செய்தும் காட்டி பழித்தார், அதே போல வையாபுரியும் பரணி எப்படி செய்தாரோ அதே போல செய்து காண்பித்து பரணி மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்தினார்.
இவர்கள் இப்படி பல வேலைகள் செய்தாலும், பலரும் தற்போது வரை பரணிக்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார்களே தவிர மற்றவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை.
