தமிழ் சினிமாவில், கிராமத்து கதைக்களத்தை கொண்ட படங்களை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இயக்கி வருபவர், சீனு ராமசாமி.  

தமிழ் சினிமாவில், கிராமத்து கதைக்களத்தை கொண்ட படங்களை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இயக்கி வருபவர், சீனு ராமசாமி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் இயக்கத்தில் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

மேலும் தற்போது மாமனிதன் மற்றும் ஜீவா - அருள் நிதியை வைத்து, இன்னும் பெயரிடாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் படம் ஒன்றில் ட்ரைலரை வெளியிட்டு இந்த படத்திற்கு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, குசேலன், சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி, பிதாமகன், மற்றும் நடிகர் ஜெயராம் நடித்த ஜூலி கணபதி ஆகிய படங்கள் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…