கொரோனா தொற்று காரணமாக, பல பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை, மரணம் அடைந்த தகவலை, அவருடைய மகன் மிகவும் சோகமாக வெளியிட்டுள்ளார்.

நடிகை ஹிலாரி ஹீத்:

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பழம்பெரும் நடிகை ஹிலாரி ஹீத். 74 வயதாகும் இவர் 1968 ஆம் ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இவர் நடிப்பில் முதல் முதலில் வெளியான,  'விட்ச் பைண்டர்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஹோலிவுட் திரையுலகில் வலம் வந்தார்.

திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட பின், திரைப்பட பைனான்சியராக இருந்தார்.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை:

இந்நிலையில், ஹிலாரிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று தென்பட்டதை அடுத்து, அவரை அவருடைய மகன் மற்றும் குடும்பத்தினர், இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

தொடர்ந்து சிகிச்சைகள் அளித்தும், சிகிச்சை பலனின்றி... ஹிலாரி ஹீத் மரணமடைந்துவிட்டதாக அவருடைய மகன், அலெக்ஸ் வில்லியம்ஸ் மிகவும் சோகத்தோடு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல பிரபலங்களின் உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தால் தற்போது ஹிலாரியும் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.