hollywood actress Brigitte Nielse pragnent in 54 age

இத்தாலியைச் சேர்ந்த நடிகையும், பாடகியுமான பிரைகிட்டீ நெல்சன் (Brigitte Nielsen) தன்னுடைய 54வது வயதில் கர்பமாக இருப்பதாக கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

1985 ஆம் ஆண்டு 'ரெட் சன்ஜா' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏற்கனவே கஸ்பர் விண்டிங் என்பரை திருமணம் செய்து, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின் ஹாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் என பல்வேறு திறமைகளை கொண்ட மைக்கேல் சில்வெஸ்டர் கார்டேன்சியோ ஸ்டாலோன் என்பவரை காதலித்து 1985 ஆண்டே திருமணம் செய்துக்கொண்டார். 

இதுவரை நான்கு திருமணங்கள் வரை செய்துக்கொண்டு விவாகரத்து பெற்ற பிரைகிட்டீ நெல்சன் கடைசியாக மாட்டியா டெஸ்சி என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். 

இவருக்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய முதல் மகனுக்கு தற்போது 34 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரைகிட்டீ நெல்சன் ஐந்தாவதாக, அவருடைய கணவர் மாட்டியா டெஸ்சிக்கு குழந்தைப் பெற உள்ளார். இந்த தகவல் மற்றும் அவர் கர்பமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.