பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி,  இவர் 8 செகண்ட்ஸ்,  த ஹீஸ்ட், அமெரிக்கன் ஸ்ட்ரோம்,  உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர்.

ஹாலிவுட் டிவி தொடர்களிலும் நடித்து வந்தார்.  இவர் நடிப்பில் ஒளிபரப்பான 'பெவர்லி ஹில்ஸ் 90210 ' என்ற டிவி தொடருக்கு அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

கடைசியாக லியானார்டோ டிகாப்ரியோ.  பிராட் பிட் ஆகியோருடன் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' என்ற படத்தில் நடித்து வந்தார்.  இந்த படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது.  இந்நிலையில் லூக் பெர்ரி, கடந்த மாதம் 27 ஆம் தேதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். 

இதற்காக மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி திடீர் என மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52 . 1993 ஆம் ஆண்டு பிரான்சில் மின்னி என்பவரை மணந்துகொண்டு 2003 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருடைய மரணம் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.