ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி, அவருக்கு கீழே பணி புரிகையில் சுதந்திரத்தை கழட்டி வைத்துவிட்டுதான் செல்ல வேண்டும்! சிறப்பாக பணியாற்றினாலும், எந்த பாராட்டும் இருக்காது!....என்று ஒரு விமர்சனம் உண்டு.ஆனால் அதை ‘பொய்’ என்று உலகுக்கு உணரவைத்த நபர்களில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அடக்கம். அவர்களில் முக்கியமானவர்தான் இப்போது நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக இருக்கும் இன்னசென்ட்  திவ்யா. இவரை ‘ஜெயலலிதாவின் செல்லப்பொண்ணு’ என்பார்கள் தமிழக அரசின் உயர் அதிகாரிகள். காரணம், ‘சி.எம். செல்’ எனப்படும், முதல்வரின்  தனிப்பிரிவுக்கு வரும் கண்ணீர்க் கடிதங்களையும், புகார் கடிதங்களையும் வாசித்து அவற்றின் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டதாக பொதுவான பாராட்டையும், ஜெயலலிதாவின் ஸ்பெஷல் பாராட்டையும் பெற்றவர் இன்னசென்ட்.


பார்ப்பதற்கு கல்லூரி மாணவி போல் சிறிய பெண்ணாக  இருந்தாலும் கூட, பம்பரமாக சுற்றிச் சுழன்று நடவடிக்கை எடுப்பதில் இவருக்கு நிகர் நிற்பது சிரமமே. நீலகிரி மாவட்டத்திலும் மிக சிறப்பான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். இந்த நிலையில் அவருக்கு எதிராக இந்து முன்னணி மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. 
ஏன்? என்று கேட்டால்...“கொஞ்ச காலமாகவே நீலகிரி மாவட்டத்துல மதமாற்றம் ரொம்ப அதிகமா நடந்துட்டு இருக்குது. மாவட்ட நிர்வாகம் அதை கண்டுக்குறதே இல்ல. சில நாட்களுக்கு முன்னாடி ஊட்டியில் ஒரு தம்பதி வீடு வீடாக போயி, இந்து தெய்வங்களை தரக்குறைவாக பேசி, கிறுத்துவ மதத்துக்கு மாறுவதற்கு மக்களை கேன்வாஸ் பண்ணினாங்க. 

கோபமுற்ற இந்துக்கள் இவங்களை கார்னர் பண்ணி, விபூதி பூசிக்க வெச்சு அனுப்பினாங்க. இந்த பிரச்னை சம்பந்தமா இந்து முன்னணியினர் கலெக்டரிடம் பேசப்போனப்ப் இந்துக்கள் பண்ணினதை தான் குற்றமாக் கலெக்டர் குறிப்பிட்டாங்க. கிறுத்துவ அமைப்புகள் தங்களோட குறைகளை சொல்ல டைம் கேடால் கொடுக்கிறாங்க, ஆனால் இந்து முன்னணியினர் போன்ற இந்து அமைப்புகள் கேட்டால் இழுத்தடிக்கிறாங்க. வீடுகளை வாடகைக்கு பிடிச்சு, அதில் சட்ட புறம்பாக ஜெபக்கூட்டம் நடத்துறாங்க கிறுத்தவ அமைப்புகள். இதை பற்றி பல முறை புகார் கொடுத்தும் பலனில்லை.  ஒட்டு மொத்த நீலகிரி மாவட்ட நிர்வாகமே கிருத்துவர்களுக்கு ஆதரவாக நிற்குது. அதனால்தான் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.” என்கிறார்கள். 


எந்த நடவடிக்கையையுமே சட்டப்படியும், நீதி வழிகாட்டுதல் படியுமே எடுக்கும் ஆட்சிய இன்னொசென்ட்  திவ்யாவோ இந்த புகார்களை அடியோடு மறுக்கிறார். கூடவே நீலகிரி மாவட்ட நிர்வாகமும், ‘ஆட்சியருக்கு எதிராக வேண்டுமென்றே வதந்தி கிளப்புகிறார்கள். திவ்யா மேடம் இங்கே கலெக்டராக இருந்தால் குறுக்கு வழியில் சம்பாதிக்க முடியாது! என்று நினைப்பவர்கள்தான் இப்படி பிரச்னையை கிளப்பி அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். கலெக்டர் மேடம் தானாக எந்த பிரச்னைக்கும் போகமாட்டார், ஆனால் தன்னை தேவையில்லாத சிக்கலில் இழுக்கும் நபர்களுக்கு பாடம் நடத்தாமல் விடமாட்டார். எனவே இம்சை இழுப்பதன் மூலம், தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளது இந்துமுன்னணி.’ என்கிறது. ஹும்! கவனமா இருங்க மேடம்.