தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
 
தமிழில் கார்த்தியின் "தீரன் அதிகாரம் ஒன்று", சூர்யாவின் "என்.ஜி.கே." உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும் "SK-14" படம், கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன்-2" படங்களிலும் நடிக்க அவர் கமிட்டாகியுள்ளார். 

தமிழில் நடித்துவரும் அதேவேளையில் ஹிந்தியிலும் கவனம் செலுத்திவரும் ரகுல் ப்ரீத் சிங், கடைசியாக பிரபல நடிகர் அஜய் தேவ்கணுடன் இணைந்து "தி தி பியார் தி" படத்தில் நடித்திருந்தார். 

தற்போது, இளம் நடிகர் சித்தார்த்துடன் "மார்ஜாவான்" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்குவர தயாராக உள்ளது. இதனையடுத்து படத்திற்கான ப்ரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள படக்குழு, தீபாவளி ஸ்பெஷலாக ரகுல் ப்ரீத் சிங் கவர்ச்சி நடனமாடியுள்ள "ஹையா ஹோ" பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது. 

தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு, ரகுல் ப்ரீத் சிங் போட்டுள்ள செம்மயான கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. தொடர்ந்து, ரசிகர்களின் லைக்குகளை அள்ளிவரும் இந்த வீடியோ, இதுவரை, 6 மில்லியனுக்கும் அதிகமான வியூசைப் பெற்று அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது.