பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களாக மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு பழக்கம். 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஆண், பெண் நட்பு, காதல், ரொமான்ஸ், பிரிவு, அழுகை, சண்டை ஆகியவற்றை மட்டுமே தமிழ் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். முதல் சீசனில் ஓவியா - ஆரவ், 2வது சீசனில் மகத் - யாஷிகா, 3வது சீசனில் கவின் - லாஸ்லியா என காதலர்களாக வலம் வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள், ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொள்வதே பெரிய விஷயமாக தமிழ் ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதையெல்லாம் கடந்து வெற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது. 

இந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் ஒளிபரப்ப பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அதற்கு காரணம் எல்லை மீறிய ஆபாசங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்புவதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. முன்பின் தெரியாத ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளவது, லிப் லாக் கிஸ், நீச்சல் குளத்தில் ஓவர் ரொமான்ஸ் என இந்தி பிக்பாஸ் அத்துமீறி சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் கலர் தொலைக்காட்சி வெளியிட்ட புரோமோ ஒன்று மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அனைவரது முன்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபல ஆண், பெண் ஜோடி ஒன்று லிப் லாக் கிஸ் அடித்த வீடியோ இடம் பெற்றுள்ளது. இந்த புரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் என்ன தான் இளைஞர்களை கவர்ந்தாலும், இன்னும் எதையெல்லாம் பார்க்க வேண்டுமோ என சமூக