ஓடும் காருக்கும் தன்னை கற்பழிக்க முயன்றதாக பிரபல இயக்குநர் மீது நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளும் பெண் இயக்குனர்களும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி வருகிறார்கள். தெலுங்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறினார். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பட்டியலையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினார்கள்.
தமிழகத்திலும் கவிஞர் வைரமுத்து, ராகாவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுசி கணேசன் உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா இந்தி பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக அம்பலப்படுத்தினார். அங்குள்ள மேலும் சில நடிகைகளும் பெண் இயக்குனர்களும் ‘மீடூ’வில் பாலியல் புகார் கூறினார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பிதிதா பக்கும் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரபல டைரக்டர் ராம்கோபாலிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் என்னை அணுகினார். அவர் டைரக்டு செய்யும் புதிய படத்துக்கு கதாநாயகி தேர்வு செய்வதாக கூறினார். அந்த இயக்குனருடன் நான் நட்பாக பழகினேன். ஒரு நாள் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பினோம். அப்போது காருக்குள் என்னிடம் தவறாக நடந்தார்.
என்னை விட்டு விடு என்று அவரிடம் கெஞ்சினேன். அதற்கு அவர் லூசு மாதிரி பேசாதே. இருவரும் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி பாலியல் தொல்லை கொடுத்தார். கற்பழிப்பு முயற்சியில் இருந்து நான் தப்பி விட்டேன். நண்பர் என்று பழகியவர் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 14, 2019, 7:15 AM IST