நடிகர் சங்கம் பிரச்சனை:

காஞ்சிபுரம் மாவட்டம், வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக இருந்த 29 சென்ட் நிலத்தை உறுபினர்கள் அனுமதி இன்றி நடிகர் சரத் குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடந்த 2006 ஆம் ஆண்டு முறைகேடாக விற்பனை செய்து கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் மீது நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு:

ஆனால் விஷால் குற்றம் சாட்டிய நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இதனால் சென்னை ஐகோர்ட்டை நாடினார் விஷால். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் இதில் சம்பத்தப்பட்ட நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

4 பிரிவுகளில் வழக்கு:

இதைத்தொடர்ந்து சரத்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.