என்னடா ‘வேதாளம்’ பட சீன அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்கீங்க... பாலிவுட் படத்தை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்
vedhalam : பாலிவுட்டில் அண்மையில் வெளியான ஹீரோபண்டி 2 என்கிற படத்தில் அஜித்தின் வேதாளம் பட காட்சியை அப்படியே காப்பி அடித்துள்ளதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், அப்படத்தை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். மேலும் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
தமிழில் வெற்றிபெற்ற இப்படம் தற்போது பிறமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் போலா ஷங்கர் என்கிற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றார்.
இந்நிலையில், பாலிவுட்டில் அண்மையில் வெளியான ஹீரோபண்டி 2 என்கிற படத்தில் அஜித்தின் வேதாளம் பட காட்சியை அப்படியே காப்பி அடித்துள்ளதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், அப்படத்தை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் மிரட்டும் வில்லன்களிடம் நக்கலாக சிரித்தபடி செல்லும் அஜித்தின் அந்த மாஸான சீனைத் தான் ஹீரோபண்டி 2 படத்தில் நடிகர் டைகர் ஷெராப் அப்படியே காப்பி அடித்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Losliya : லாஸ்லியா ரகசியமாக வைத்திருந்த போட்டோவை ‘லாஸ்லியா லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்ட ஹேக்கர்கள்