தானே முன்வந்து தன்னம்பிக்கை கொடுத்த நடிகை... "தளபதி 64" பற்றி ஹீரோயின் போட்ட ட்வீட்...!

தீபாவளி விருந்ததாக அட்லீ - விஜய் கூட்டணியில் வெளி வந்த 'பிகில்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'தளபதி 64' ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி களம் இறங்குகிறார். மேலும் சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சம்மர் விருந்தாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், டெல்லியில் இரண்டாம் கட்ட படிப்பு நடைபெற்று வருகிறது. தலைநகரமே கடும் காற்று மாசால் திண்டாடி வர, மூச்சு விடக்கூட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட படக்குழு திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க முடியாமல் திண்டாடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் சொன்ன தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், ஒன்றிரண்டு காட்சிகளையாவது படக்குழு எடுத்து வருவதாக செய்தி பரவியது. 

டெல்லியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் கடும் காற்று மாசால் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்த நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் வெளியிட்ட திடீர் தகவல் அனைவரையும் குஷியாக்கியுள்ளது. "இன்று முதல் தான் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக" மாளவிகா மோகனன் போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அப்போ திட்டமிட்ட படி தளபதி 64 திரைக்கு வந்திடுங்கிற நம்பிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.