'இரும்புத்திரை' புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், முதல்முறையாக சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். 

தமிழில் அவர் அறிமுகமாகும் முதல்படம் இது. முக்கிய கேரக்டரில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும், வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோலும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். 

ஏற்கெனவே, 'ஹீரோ' படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் அசத்தலான டிரைலர்  வெளியாகியுள்ளது. 
சுயமாக சிந்திக்க தெரிந்தவன் சூப்பர் ஹீரோ என சிவகார்த்திகேயன் மாஸ் காட்டியிருக்கும் இந்த டிரைலர், ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 

வெளியான சில மணிநேரங்களிலேயே சமூகவலைதளங்களில் வைரலான 'ஹீரோ' டிரைலர், யு-டியூப்பில் மில்லியன் வியூசை கடந்திருப்பதுடன், டிரெண்டிங்கிலும் முதலிடத்தைப் பிடித்து அசரடித்து வருகிறது.

இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் 'ஹீரோ' படக்குழுவுக்கு, மற்றொரு சர்ப்ரைசை சென்சார் குழு அளித்துள்ளது. யெஸ், ஹீரோ படத்தை பார்த்த சென்சார் குழுவினர், "தனி ஒருவன், இரும்புத்திரை படங்களுக்கு அப்புறம் செம்ம படம் எடுத்திருக்கீங்க" என பாராட்டு பத்திரம் வாசித்துள்ளனர். 

அதோடு நிற்காமல், எந்தவொரு கட்டும் இல்லாம் 'ஹீரோ' படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்து படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். 
தற்போது, டிரைலரும் டிரெண்டிங், சென்சார் குழு பாராட்டுடன் 'யு' சர்டிஃபிகேட் என டபுள் ஜாக்பாட் கிடைத்திருக்கும் சந்தோஷத்தில், திட்டமிட்டபடி 'ஹீரோ' படத்தை வரும் 20ம் தேதி ரிலீஸ் செய்யும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.