துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பட்டாஸ்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மெஹரின் பிர்சடா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர். 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பட்டாஸ்' படத்திற்கான புரோமோஷன் வேலைகள் பொறி பறக்கிறது.  அந்தப் படத்தில் தனுஷ் பாடியிருக்கும் "ச்சில் ப்ரோ" என்ற பாடல் ட்விட்டர் மற்றும் யூ-டியூப்பில் ட்ரெண்டிங்கில் வெறித்தனம் காட்டி வருகிறது. 

"ச்சில் புரோ" பாடலில் தனுஷ் செய்துள்ள மூவ்வை டிக்-டாக் வீடியோவாக பதிவு செய்து, #ChillBroChallenge என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் பதிவிட வேண்டும் என்றும், அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஸ்மார்ட் போன் பரிசளிக்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதேபோன்று, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்திற்கான புரோமோஷன் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்யம் தியேட்டர் முன்பு மிகப்பெரிய கட்-அவுட், ஹீரோ கேம், ரயில் முழுவதும் ஹீரோ போஸ்டர் என புரோமோஷன் வேலைகள் வேற லெவலுக்கு உள்ளது.

பாடல், போஸ்டர் ரிலீஸ் என அடுத்தடுத்து இருவரும் ட்ரெண்டிங்கில் கலக்கி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படக்குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு ஹீரோ படத்தின் தமிழ் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து #HeroWAStickers என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.