நடிகர் சிவகார்த்திகேயன் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் வெற்றிக்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம் 'ஹீரோ'. 

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் இவானா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபி தியோல், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்,  டீஸர், ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆக்சன் - திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களைவிட இப்படம் மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.