சிவகார்த்திகேயன் நடிப்பில், டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தை இரும்பு திரை படத்தை இயக்கி பிரமிக்க வைத்த இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலரில் இடம் பிடித்த ஒவ்வொரு காட்சிகளும், ரசிகர்களை பிரமிக்க வைத்தது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் அதிகரிக்க செய்தது.

சிறிய வயதில் இருந்ததே சூப்பர் ஹீரோவாக வளர வேண்டும் என்கிற ஆசையில் வளரும் குழந்தை, எப்போடி ஹீரோவாக மாறுகிறார் என்பதை விறுவிறுப்பு மற்றும் அக்ஷன் கலந்து கதையோடு இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார், மேலும் இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் படம் துவங்கப்பட்டு ஆக்ஷன் சொல்வதில் இருந்து ரிலீஸ் செய்யும் தேதிவரை குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வரும் மேக்கிங் வீடியோ இதோ...