Here is why Vijays Mersal is in trouble now

காவலன் படத்தில் ஆரம்பித்த குடைச்சல் 'மெர்சல்' வரையிலும், ஒவ்வொருமுறை விஜய் நடிக்கும் படங்களுக்கு ஏதாவதொரு வழியில் யாரோ ஒருவர் மூலமாக பட ரிலீஸ் நேரத்தில் ஊடகங்களுக்கு தீனிபோடும் மீட்டராக அமைந்து விடுகிறது.

'மெர்சல்' தலைப்புக்கு டிரேட்மார்க், டிவிட்டரில் இமோஜி, டீசர் பார்வையாளர்களில் சாதனை என தொடங்கிய கொண்டாட்டத்திற்கு நடுவில் ஃபெப்சி ஊழியர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு ரத்து. இங்கே தான் வைத்தார்கள் முதல் செக்... இதனையடுத்து 'மெர்சல்' தலைப்பை தடை செய்ய வேண்டும் ஒரு கேஸ், அடுத்தது தியேட்டர் அதிபர்களும் சமயம் பார்த்து விஜய்க்கு வேட்டு வைக்க வேலையை தொடங்கினார்கள்.

கேளிக்கை வரியால் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் எனத் தொடர்ந்து வந்த நேரத்தில் எப்படியும் படம் வெளியாகும் என நம்பிக்கையில் இருந்தது தயாரிப்பு தரப்பு, எல்லாம் ஒருவழியாக முடிந்தது என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் புதிதாக உருவெடுத்துள்ளது தணிக்கை சான்று மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் என்ஒசி(NOC- NO OBJECTION CERTIFICATE) சான்று பெறுவதில் சிக்கல்.

படத்தின் ரிலீஸுக்கு தியேட்டர்கள் உறுதி செய்யப்பட்டு, போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட் என எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த நேரத்தில் இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற தகவல் ரசிகர்களை மட்டுமல்ல இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கே தலை வலிக்கிறது.

கடந்த 06 ஆம் தேதி தணிக்கை சான்று பெறுவதற்காக படம் தணிக்கை குழுவுக்கு திரையிடப்பட்டது. ஆனால், படத்தை பார்த்த தணிக்கைக்குழு, ஏகப்பட்ட கட்டிங் போட்டும் விலங்குகள் காட்டப்பட்டுள்ளதால் அதுகுறித்து விலங்குகள் நல வாரியத்திடமிருந்து என்ஒசி பெறவும் வலியுறுத்தியது. இவையெல்லாம் சரிசெய்யப்பட்டால் படத்துக்கு யு/ஏ சான்று கிடைத்துவிடும் எனநினைத்த அட்லி ட்விட்டரில் மெர்சலின் தணிக்கை குறித்து பதிவிட்டிருக்கிறார்.

ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்க்கெல்லாம் காரணம் ஆளும் அரசா? இல்லை இது அரசியல் சம்பந்தமான காட்சிகள் இருப்பதால் படத்தை எதிர்க்கிறார்களா என தளபதிக்கு கொஞ்சம் குழப்பமாம்... ஜெயலலிதா இறப்புக்கு அப்புறம் கூட உங்க படத்தை பிரச்சனை இல்லாம ரிலீஸ் பண்ண முடியலேயே என நெட்டிசன்கள் கலாய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இதனை எல்லாம் சரிகட்டவே தயாரிப்பு தரப்பு விஜயை நாடி முதல்வரிடம் முறையிட்டாள், படம் நிச்சயம் வந்துவிடும் என ஒரு ஐடியாவை கொடுத்ததால் இன்று காலை முதல்வரை சந்தித்தார் விஜய்.

2012ல் தலைவா படம் ரிலீஸுக்கு தயார ஆன போது அதில் அரசியல் டயலாக்குகள் இருப்பதை ஆட்சி மேலிடம் கண்டுபிடித்தது. இப்போதும் அதே நிலைமை தான் மெர்சலில் ஆளும் அரசை மிரட்டும் அளவிற்கு பன்ச் வசனம் இருக்கிறதாம், இதனால் பட ரிலீஸுக்கு எந்த காரணமும் சொல்லாமல் ஆப்படிக்க ஆரம்பித்தனர். தியேட்டர்கள் கிடைக்கவில்லை, கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரிலீஸாகவில்லை. தலைவா தன் வளர்ச்சியின் மிகப்பெரிய மைல் கல்லாக நினைத்திருந்த விஜய் அதிர்ந்து போனார்.

அப்போது கொடநாடில் தங்கியிருந்தபடி தமிழக அரசை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரிடமே நேராக முறையிடுவது என்று கொடநாடு கிளம்பிப் போனார். ஆனால் கொடநாடுக்கு சில கிலோமீட்டர்கள் முன்பாக ‘கேரடாமட்டம்’ எனுமிடத்தில் அவரது காரை மறித்து, கீழே இறங்கி நடந்தே செல்ல சொல்லியது போலீஸ். நடந்துதான் போனார். அப்படியாவது ஜெயலலிதாவை சந்திக்க முடிந்ததா என்றால்?. முன் அனுமதி இல்லையென்பதால் சந்திக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

அதன் பிறகு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துத்தான் படம் ரிலீஸானது. சினிமாவில் மாஸ் காட்டும் விஜய் யதார்த்தத்தில் இப்படி ஜெ., வீட்டு முன் காத்துக்கிடந்து தோற்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அன்று எப்படி ஜெயலலிதா வீட்டுக்கு போய் தன பட ரிலீசுக்கு உதவி கேட்டாரோ அதேபோலத்தான் இப்போதும் முதல்வரை நாடி பிரச்சனை இல்லாமல் வெளியாக கொரு கோரிக்கையை வைத்துவிட்டு கிளம்பியுள்ளார் புதிய தளபதி.