ரஜினியின் பேட்ட படத்தை போன்றே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. பேட்ட படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸோ மணிக்கு ஒருமுறை அப்டேட் கொடுக்கிறது. ஆனால், விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸிடம் அஜித் ரசிகர்கள் கெஞ்சினாலும் கண்டுகொள்வதே இல்லை.

பேட்ட ட்ரெய்லர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ட்விட்டர் முழுவதும் இருந்தது. விஸ்வாசம் படத்தின் டீஸர் எப்பொழுது வரும் என்று தெரியாமல் அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருந்த ரசிகர்கள் பேட்ட ட்ரெய்லரை பார்த்ததும் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் மீது கோல காண்டில் இருந்தனர்.

ரசிகர்களின் வெறித்தனத்தை சாந்தப்ப படுத்தும் முயற்சியாக படத்தின் எடிட்டர் ரூபன் மூலம் கொல மாஸா ஒரு டிரெய்லர் வந்துகொண்டே இருக்கிறது என டிவீட் போடவைத்தனர். ரூபனின் ட்விட்டைப் பார்த்த ரசிகர்கள் குழியில் கொண்டாடி மகிந்த கொண்டிருக்கும் நேரத்தில் கோல மாஸா ஒரு போஸ்டர் போட்டு இன்று வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டனர் தயாரிப்பு நிறுவனம். சொன்னதைப்போலவே கொல மாசா ஒரு டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.