ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு "தர்பார்" என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு "தர்பார்" என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ரஜினிகாந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதற்கான முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
நாளை மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. 'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நாயகியாக நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத்தின் துள்ளலான இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

இப்படத்திற்கான 167 படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தது படக்குழு. இதற்காக ரஜினியை வைத்து போட்டோஷூட் செய்யப்பட்டது. போட்டோஷூட் நடைபெறும் போதே போலீஸ் ஆபீசர் கெட்டப்பில் ரஜினி உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று காலை 8.30 மணிக்கு முதல் பார்வை வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதேபோல சற்று முன்பு படத்தின் தாறுமாறான தர்பார் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
போஸ்டர் வெளியான சில நிமிடங்கலிலேயே உலக அளவில் ட்ரெண்டானது. லைக்ஸ், ஷேர் குவிகிறது.
