நடிகை ஸ்ரேயா கொரோனா தடுப்பு பணிக்காக, உதவும் நோக்கத்தில், பிரபல தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்றாலும், ஒருவேளை ஸ்ரேயாவுடன் ஆட்டம் போடும் அதிர்ஷ்டசாலி நீங்கலாக கூட மாற வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. கிட்ட தட்ட 10 வருடங்களாக, முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், கடைசியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, AAA படத்தில் நடித்தார்.

ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, இந்த படம் தோல்வி அடைந்ததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவெடுத்தார்.

அதன் படி, ரஷ்யாவை சேர்ந்த காதலர் ஆண்ட்ரு என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, பின்னர் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு அறிவித்தார். தற்போது தன்னுடைய கணவர் ஆண்ட்ருவுடன், ஸ்பெயினில் வசித்து வருகிறார் ஸ்ரேயா. 

சமீபத்தில் கூட, ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ருவுக்கு திடீர் என கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பின் குணமடைத்ததாக தெரிவித்தார் ஸ்ரேயா. இதனால் தானோ என்னவோ தற்போது கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். ஆன்லைன் பணம் அனுப்பு ஆப் மூலம், ரூபாய் 200 நிதி உதவி அனுப்பி, அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய சமூக வலைதள முகவரிக்கு அனுப்புமாறு ஸ்ரேயா கூறியுள்ளார். 

இதில் இருந்து, தேர்வுசெய்யப்படும் இருவருக்கு ஸ்ரேயா உடன் நடனம் ஆடும் வாய்ப்பு மட்டும் இன்றி அவருடன் யோகா போன்றவை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சிலர் ஸ்ரேயாவுடன்  ஆட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, உதவும் நோக்கத்தில் அந்த  தொண்டு நிறுவனத்திற்கு பணம் அனுப்பி வருகிறார்கள்.