இன்று ஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு ட்விட்டர் நிறுவனம் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரு வாரங்களுக்கு முன்பு வலிமை படத்தின் முதல் சிங்கிளான நாங்க வேற மாரி பாடல் வெளியானது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில் வெளியான இந்த பாடல் தான் அஜித்திற்கான இன்ட்ரோ சாங்க் எனக்கூறப்பட்டது. பாடல் வெளியான சில விநாடிகளில் இருந்தே பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில், தற்போது நாங்க வேற மாதிரி பாடல் யூ-டியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு, #Valimai ஹேஷ்டேக் வைரலாகி வந்தது.

இன்று ஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு ட்விட்டர் நிறுவனம் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜுன் வரையிலான அரையாண்டில் எந்த ஹேஷ்டேக் ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் வலிமை ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலும், மாஸ்டர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதேபோல் #Ajithkumar 4வது இடத்தையும், #Thalapathy65 5வது இடத்தையும் பிடித்துள்ளது.