Has Sridevi Undergone Lip Surgery? See Photos

நடிகை ஸ்ரீதேவி உதட்டில் வீங்கி விட்டது இதற்க்கு காரணம் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது தான் என வட இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி எப்படிப்பட்ட அழகி? கனவுக்கன்னியாக இருந்த காலம் முதல் தற்போதுவரை இன்னும் கோலிவுட், பாலிவுட் ரசிகர்களை தன் அழகால் கட்டிப்போட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதலில் அவர் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றினார். அழகாக இருந்த மூக்கை இப்படி மாற்றி வைத்துள்ளாரே என ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு வீட்டில் நடந்த சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவியின் உதடுகளை பார்த்து பூஜைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீதேவிக்கு இயற்கையிலேயே செம அழகான உதடுகள். ஆனால் அனுராக் பாசு வீட்டு பூஜையில் அவரின் உதடுகள் வீங்கியது போல கொடுமையாக விகாரமாக காட்சியளித்துள்ளது.

ஸ்ரீதேவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அது இப்படி விகாரமாகிவிட்டது என அங்கு வந்தவர்கள் கிசுகிசுக்க. இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, நான் ஒன்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை

எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மீது நம்பிக்கை இல்லை. நான் பவர் யோகா செய்கிறேன், அதுமட்டிமில்ல வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் விளையாடுகிறேன், உணவுக்கட்டுப்பாட்டில் உள்ளேன், ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுகிறேன் என வந்தவர்களிடம் சமாளித்துள்ளார் ஸ்ரீதேவி.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களோ, இயற்கையான அழகை இப்படி கேடுத்துக்கொண்டாரே என புலம்பிகொண்டிருந்தார்களாம்.