கேரள அரசு சார்பில் வருடம் தோறும், மத ஒற்றுமை மற்றும் தேச ஒற்றுமைக்காக பணியாற்றிய கலைஞர்களை கௌரவ படுத்தும் வகையில் வழங்கப்படும் ஹரிவராசனம் என்கிற விருது இந்த வருடம் இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனுக்கு வழங்கபடுகிறது.
இதற்கு முன் பாடகர் ஏசுதாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது கேரளா அரசு.
ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் நடக்கும், இந்த விருது வழங்கும் விழாவில் கேரள தேவசம் போர்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு கங்கை அமரனுக்கு இந்த விருதை வழங்குகிறார்.
கேரளாவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த ஹரிவராசனம் விருது பெற்றது பற்றி இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறுகையில்.
கேரள அரசு இந்த விருதை தனக்கு கொடுத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றும். திரையுலகில் மிக சிறந்தவர்கள் ஆகிய ஏசுதாஸ் மற்றும் எஸ்.பி.பிக்கு பிறகு தனக்கு கேரள அரசு இந்த விருதினை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST