மான்ஸ்டர் படத்தின் சூப்பர் ஹிட்டை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்-2, ஜீவாவின் களத்தில் சந்திப்போம் உட்பட அரைடஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன. 

இதில், அருண்விஜய்யுடன் நடிக்கும் மாஃபியா மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள பொம்மை ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், மேலும் ஒரு புதிய படத்தில் பிரியா பவானி சங்கர் கமிட்டாகியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் 'பெல்லி சூப்புலு' . தற்போது தமிழில் ரீமேக்காகும் இந்தப் படத்தில்,.விஜய் தேவரகொண்டா கேரக்டரில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாக ரீது வர்மா கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவ்விருவரும் ஜோடி சேர்ந்து நடிப்பது இதுதான் முதல்முறையாகும். இந்தப் படத்தின் மூலம், ஹரிஷ் கல்யாணின் நெருங்கிய நண்பர் கார்த்திக் சுந்தர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். 


இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்துக்கு, விஷால் சந்திரசேகர் இசை அமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

 ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி மற்றும் ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தை திரு.கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். எஸ்.பி.சினிமாஸ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறது.
பெல்லி சூப்புல தமிழ் ரீமேக் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, சென்னையில் இன்று (டிச.11) பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. 

இந்நிகழ்ச்சியில், ஹீரோ ஹரிஷ் கல்யாண், ஹீரோயின் பிரியா பவானி சங்கர், நடிகர் நாசர் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது, முதல்நாள் படப்பிடிப்பை நடிகர் நாசர் கிளாப் அடித்து தொடங்கிவைக்க, ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சி படமாக்கப்பட்டது. ரொமான்டிக் காமெடியுடன் கூடிய இந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக திரைக்கு வருகிறது.