ஓவியா & தோழிகளின் நடிப்பில் தியேட்டர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ‘90 எம்.எல்’ படத்தின் தொடர்ச்சியாக மார்ச் 15 ம் தேதியன்று ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற கிளுகிளு படம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் காட்சிகள் முழுக்க லிப்லாக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்சினிமா சமீபகாலமாக மீண்டும் ஷகீலா பட ட்ரெண்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. ‘ஹரஹரமகாதேவகி’ தொடங்கி கடந்த வாரம் ரிலீஸான ‘90 எம்.எல்’ வரை ஆபாசப்படங்களின் வரவு மிகவும் அதிகரித்துள்ளது. சென்ஸார் அதிகாரிகளும் ஒரு படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்துவிட்டு எதை வேண்டுமானாலும் அனுமதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படம் மார்ச் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படமும் மேற்படி கில்மா வகையைச் சேர்ந்தது என்பதை ஊர்ஜிதம் செய்யும் விதமாகவே படத்தின் முன்னோட்டங்கள் உட்பட்ட அனைத்தும் உள்ளன.

படத்தில் அளவுக்கு அதிகமாக லிப்லாக் காட்சிகள் உள்ளன என்று எழுதுள்ள கமெண்டுகளுக்கு ஹீரோ ஹரிஷ் கல்யாண் ,“யோவ் ,எல்லோரும் விரும்புறதைத்தானே படத்தில் வெச்சிருக்கோம். கிஸ் அடிக்கிறது தப்பா. ஏன்யா விமர்சனம் பண்றீங்க?”என கேட்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி, தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு  ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். மேலும் மா.கா.பா. ஆனந்த், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  படம் மார்ச் 15ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.