பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 'பியர் பிரேமா காதல்' மற்றும் 'இன்ஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

இதை தொடர்ந்து, தற்போது இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை, பிரபல இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். 

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிகில் படத்தில் படத்தில் நடித்த ரெபா மோனிகா, மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகியோர் நடித்துள்ளனர். ஜோதிடரின் பேச்சை கேட்டு, திருமணம் செய்து கொள்ள கன்னி ராசி பெண்ணை தேடும் இளைராக நடித்துள்ளார்.

மேலும், யோகி பாபு, முனீஷ்காந்த், டேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின்  டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இதோ...