பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் அதிகம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் விஐபி2, படத்தில் சிறு வேடத்தில் நடித்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் பியர் பிரேமம் காதல் படத்தில் கதாநாயகியாக மாறினார்.  

இந்த திரைப்படத்திற்கு பிறகு நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியார்பிரேமா காதல்' படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும் ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளராக மாறி தொகுத்து வழங்கி வரும்  ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது "ரைசா சிங்கிளா இல்லை கமிட்டட்-ஆ?" என ஸ்ருதி கேள்வி கேட்க "அவர் சிங்கிள் தான்" என ஹரிஷ் பதில் அளித்தார்.

மேலும் இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக "ரைசா என்னிடம் வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 'எனக்கு ஒரு பாய் பிரெண்டு வேண்டும்! உன் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?' என கேட்டார்" என ரைசா மானத்தை அனைவர் மத்தியிலும் வாங்கி விட்டார்.