உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தவர் இளம் நடிகர்  ஹரீஸ் கல்யாண். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டதன் மூலம் இவருக்கு தனி ரசிகர்கூடமே உருவானது.

தற்போது இவர் இயக்குனர்  இளன்  இயக்கத்தில், பிக் பாஸ் ரைசாவுக்கு ஜோடியாக  'பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ரைசா இந்த படத்தின் மூலம் முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படபிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ஹரீஷ் கல்யாண்,   ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் வழங்கியும் , பரிசு கொடுத்தும் கொண்டாடியுள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வழ்துக்களையும்  கூறியுள்ளார். 

ஹரீஷ் கல்யாணின் இந்த செயலுக்கு, பலர் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.