பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரீஷ் கல்யாண் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த 'தாராள பிரபு' படம், நல்ல விமர்சனங்களை பெற்றது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரீஷ் கல்யாண் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த 'தாராள பிரபு' படம், நல்ல விமர்சனங்களை பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து, 'கசட தபர' மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’பெல்லி சுப்லு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார். கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவில் கிருபாகரன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஹவிஷ் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோஷனுக்காக கடந்த இரண்டு முன் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியாபவானி ஷங்கர் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில், இருவரும் காதலர்கள் போல் அமர்ந்து பேசும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இருவருமே கமெண்ட் செக்க்ஷன் ஆப் பண்ணி வைத்திருந்ததால் ரசிகர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த படத்தின் பெயரை நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது வெளியிட்டு இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் நடிக்கும் படத்திற்கு ’ஓ மணப்பெண்ணே’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே படக்குழு பிளான் போட்டு இப்படி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…