நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கடைசியாக ரொமான்டிக் த்ரில்லரான 'இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்த படத்தைத் தொடர்ந்து,  தற்போது பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற 'விக்கி டோனர்' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு 'தாராள பிரபு' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த 'விக்கி டோனர்' திரைப்படம் 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு,  65 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.  பல  விருதுகளையும் வாங்கியது. 

'தாராள பிரபு' என்ற பெயரில் உருவாகும், இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்,  யாமி கவுதம் நடித்த வேடத்தில் நடிக்க, முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.