hardware university ....kamal gave 20 lakhs
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் இன்று 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
380 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கென இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை அமைக்க அமெரிக்கா வாழ் மருத்துவர்களான சம்பத், ஜானகிராமன் ஆகிய இருவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இருக்கை அமைவதற்கு தோராயமாக ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் விஷால் தன் பங்கிற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுவரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கொடுத்த நன்கொடையை சேர்த்து 17 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதி நல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார்.
இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதி நல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய என்று தெரிவித்தார்.
ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம் என்பதும் கமல்ஹாசனின் கருத்து என ஞானசம்பந்தன் தெரிவித்தார்.
