இயக்குனர் ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில். ஜெ.பி.ஆர் & ஸ்டாலின் தயாரிக்க உள்ள திரைப்படம் 'Friendship'. விரைவில் இப்படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. 

இந்த படத்தில், சந்தானத்துடன் 'டிக்கி லோனை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ள சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா நாயகியாக நடிக்கிறார். 

மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய தல அஜித்! 'வலிமை' ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்! 
 

ஏற்கனவே இந்த படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ள நிலையில், தற்போது பிரபல காமெடியன் சதீஷ் இணைந்துள்ளார். இது குறித்து சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், Friendship படத்தில் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்குடன் இணைவது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

இதற்கு தமிழிலேயே பதில் அளித்து, சந்தடி சாக்கில் சதீஷை ஸ்ரீவில்லி புத்தூர் பால்கோவா என கலாய்த்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள ஹர்பஜன் சிங் "புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம் என கூறியுள்ளார்.