படப்பிடிப்பின் போது அனைவர் முன்னிலையிலும் பிரபல ஹீரோ ஒருவர் தன்னை கட்டிப்பிடித்து கசக்கி பிழிந்ததாக பிரபல நடிகை அமைரா குற்றஞ்சாட்டியுள்ளார். மீ டூ என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை பட்டியலிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுசுடன் அனேகன் படத்தில் இணைந்து நடித்த நடிகை அமைராவும் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். தான் திரையுலகில் அறிமுகம் ஆன சமயத்தில் பிரபல ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த ஹீரோ யார் என்று தற்போது கூறும் துணிச்சல் தனக்கு இல்லை என்ற அமைரா கூறியுள்ளார். ஏனென்றால் அந்த ஹீரோ நினைத்தால் தற்போது தன்னுடைய சினிமா கேரியரையே முடித்துவிட முடியும் என்று அமைரா தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவராக உள்ள அந்த ஹீரோவை எதிர்த்து போராடும் பலம் தற்போது தனக்கு இல்லை என்றும் அமைரா கூறியுள்ளார்.

இருந்தாலும் கூட அந்த ஹீரோ படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை வெளிப்படுத்த காரணம் இதே போல் வேறு யாரிடமும் அந்தஹீரோ எதிர்காலத்தில் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் என்று அமைரா தெரிவித்துள்ளார். 

அதாவது தான் பாடல் காட்சி ஒன்றில் நடனம் ஆடிக் கொண்டிருந்த போது படக்குழுவினர் முன்னிலையில் எவ்வித தயக்கமும் இன்றி அந்த ஹீரோ தன்னை கட்டி அணைத்ததாக அமைரா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போது கிட்டத்தட்ட தன்னை அந்த ஹீரோ கசக்கி பிழிந்துவிட்டதாகவும் அமைரா தெரிவித்துள்ளார். மேலும் தனது காதருகே வந்து தன்னுடன் நடிப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று அந்த ஹீரோ கூறியதாகவும் அமைரா கூறியுள்ளார்.

 

ஹீரோவின் அணைப்பில் இருந்து வெளியேறி இயக்குனரை நோக்கி புகார் அளிக்க சென்ற போது இயக்குனரோ என்ன சார் அதற்குள் விட்டுவிட்டீர்கள் என்று ஹீரோவை பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டதாகவும் அமைரா கூறியுள்ளார். தற்போது அந்த ஹீரோ மற்றும் இயக்குனர் பெயரை தான் வெளியிட அச்சமாக இருப்பதாகவும் ஆனால் நிச்சயம் ஒரு நாள் வெளியிடுவேன் என்றும் அமைரா தெரிவித்துள்ளார்.