hansika slams big boss contestant

கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹன்சிகா மிகவும் அமைதியான, பாசமான நடிகை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை யாராவது கோபப்படுத்தினால் கூட அவர் யாரையும் திட்ட மாட்டார் என்று தான் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் தற்போது இந்தியில் நடந்து வரும் பிக் பாஸ் 11 வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஹினா கான் என்பவரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேவலமாகத் திட்டியுள்ளார். 

ஹன்சிகாவே கோபப்படும் படி அப்படி என்ன பேசினார் தெரியுமா? ஹினாகான் "தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் குண்டாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என இயக்குனர்கள் நடிகைகளை எடை அதிகரிக்கும்படி கூறுவது வழக்கம் எனக் கூறினார்.

இவரின் பேச்சால் மிகவும் கோபமடைந்த ஹன்சிகா இவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் "நான் தென்னிந்திய சினிமாவில் இருப்பதை பெருமையாக நினைக்கிறன், ஹினா கான் கூறியது கேவலமாக இருக்கிறது என அவரை " புல்ஷிட்" என கோபத்துடன் திட்டியுள்ளார்.

Scroll to load tweet…