hansika marriage news

நடிகை ஹன்சிகா, இவர் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்தவர், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' விஜயுடன் 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மற்ற மொழிகளை விட தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் 'போகன்' திரைப்படம் வெளியானது. இரண்டாவது முறையாக ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்த இந்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து, ஹன்சிகாவிற்கு சரியான படவாய்புகள்ளும் அமையவில்லை. சமீபத்தில் இவரை 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க வைக்க சுந்தர்.சி முயற்சி செய்தபோது இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு இப்போது ஹன்சிகாவிற்கு மார்க்கெட் இல்லாததால் இவரை ஒப்பந்தம் செய்ய மறுத்து விட்டதாக கூறபடுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க, தீவிரமாக படக்குழு முயற்சி செய்து வருவதாகவும் கூறபடுகிறது.

ஹன்சிகாவிற்கு தற்போது, படவாய்ப்புகள் குறைத்து விட்டதாலும் அவருக்கு 27 வயது ஆகிவிட்டதால் , அவரது வீட்டில் மிகவும் ரகசியமாக ஹன்சிகவிற்கு மாப்பிள்ளை தேடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு இது உண்மையான தகவல் என தற்போது வரை தெரியவில்லை.