hansika acting as a negative role in a film
தமிழ் திரையுலகில், 'சின்ன குஷ்பு' என்று செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு நடிகை ஹன்சிகா தனது கொழுக்மொழுக் அழகினாலும், துள்ளலான நடிப்பினாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தனுஷின் 'மாப்பிள்ளை' படம் மூலம் கோலிவுட்டில் களமிறங்கியவர் விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சியில் உள்ளார். தற்போது, பொங்கல் விருந்தாக நாளை வெளியாகவிருக்கும் "குலேபகாவலி" படத்தில் ஹன்சிகா முதல்முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து நடிகை ஹன்சிகா பேசுகையில்,
"எங்கேயும் காதல் படத்திற்கு பிறகு பிரபு தேவா மாஸ்டருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் அதே எனர்ஜி குறையாமல் இருப்பது தான் அவரது ஸ்பெஷல். இது புதையலைத் தேடி செல்லும் கதை. இதில் நான் திருடியாக நடித்திருக்கிறேன். ரொம்ப சீரியசாக இல்ல; வேடிக்கையான ஜாலியான நெகட்டிவ் ஷேட் கேரக்டர்.
நான் எப்போதும் பாசிட்டிவானவள். அதனால் எனது கேரக்டரும் பாசிட்டிவாகவே இருக்கும். எல்லா படங்களிலும் அழகை மட்டுமே நம்புவதாக கூறுவதை ஏற்க மாட்டேன். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களில் நடிப்பு திறமையை நிரூபித்திருக்கிறேன். என்னால் காமெடியும் செய்ய முடியும் என்பதை குலேபகாவலியில் காட்டியிருக்கிறேன்"
என்றார்.
"குலேபகாவலி" படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா, அதர்வா மற்றும் விக்ரம் பிரபு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
