தமிழ் சினிமாவில் ஒல்லியாக இருந்தால் தான் கதாநாயகியாக ஜொலிக்க முடியும் என்கிற ஒரு கருத்து நிலவி வந்த நிலையில், அந்த கருத்தை அடியோடு மாற்றியவர் நடிகை ஹன்சிகா.

அறிமுகம்:

இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். இவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே இவர் புசு பபுசுன்னு குஷ்பு மாதிரி உள்ளது தான். 

முன்னணி நடிகர் படங்களில் ஹன்சிகா:

கோலிவுட் இளம் நாயகிகளுக்கு டப் காம்படிஷன் கொடுத்து வந்த இவர், விஜய், சூர்யா, சிம்பு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

கடந்த இரண்டு வருடங்களாக ஹன்சிகாவின் மார்க்கெட் சற்று டல்லடிக்க துவங்கி விட்டது. இவர் நடித்து வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெராததால் தற்போது 'துப்பாக்கி முனை' மற்றும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

எலும்பும் தோலுமாக மாறிய ஹன்சிகா: 

இந்நிலையில் தற்போது ஹன்சிகா ஒல்லியான எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். ஆனால் ரசிகர்களுக்கோ இவரின் இந்த புதிய தோற்றம் சுத்தமாக பிடிக்க வில்லை. தற்போது வைரலாக வெளியாகியுள்ள இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை பார்த்தால் பரிதாபம் தான் வருகிறது என்பது போல் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.