‘மஹா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் கஞ்சா குடித்து பரபரப்பை உண்டு பண்ணிவரும் நடிகை ஹன்ஷிகா மோத்வாணி படப்பிடிப்பு தளங்களுக்கு தனது செல்ல நாய்க்குட்டியுடன் வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஹன்ஷிகா கடைசியாக நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி முனை’ சுமாராகவே போய்க்கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் விளம்பரத்திற்காக, அவர் படப்பிடிப்பு தளத்துக்கு நாய்க்குட்டியுடன் வந்து நான்சென்ஸாக  நடந்துகொண்ட கதைகள் இணையங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

தினமும் கம்பெனி காரில் தனது நாயுடன் மட்டும் ஏறிக்கொள்ளும் ஹன்ஷிகா, ஷாட்டுக்கு உதவி இயக்குநர்கள் அழைத்தபிறகும் கூட நாயைக்கொஞ்சுவதை நிறுத்தமாட்டாராம். இதனால் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரங்கள் வரைகூட விரயமானதுண்டாம்.

நடிகைகள் தங்கள் தாயை விட்டுக்கூட பிரிந்து வருவார்கள். ஆனால் தங்கள் நாயை விட்டு மட்டும் பிரியவே மாட்டார்கள் என்று மேல்நாட்டுக்கவிஞர்கள் யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.