இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, நிக்கிகல் ராணி நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் இந்த வாரம் 10ஆம் தேதி வெளிவரும் என தெரிவிக்க பட்டது.

ஆனால் தற்போது லிங்கா படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க படாததால், கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு தடை விதிக்ககோரி மெரினா பிக்ச்சர்ஸ் சார்பில் விநியோகிஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு இரண்டு வார காலம் இடை கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அதனால் திட்டமிட்ட படி இந்த வாரம் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.