கடந்த 2016 ஆண்டு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியை வைத்து 'பிச்சைக்காரன்' என்கிற வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் சசி.  இந்த திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில் இயக்குனர் சசி இயக்கி வரும் அடுத்த படத்தில்,  ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் 'ரெட்டை கொம்பு' என்று ஏற்கனவே வதந்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.