அதற்கு முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக வெளியான அறிவிப்புடன் ஜி.வி.பிரகாஷ் படக்குழு உதயநிதிக்கு அசத்தலான பட்டம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் ஏதார்த்தமான நல்ல கதைகளை இயக்கும் இயக்குநராக சீனு ராமசாமி விளங்கி வருகிறார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. சீனு ராமசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது கண்ணே கலைமானே தான், இதில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இப்படத்தைத் தொடர்ந்து, தன்னுடைய தென் மேற்கு பருவக்காற்று, நீர் பறவை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனியில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதுவரை கிராமத்து கதைகளில் பின்னிபெடலெடுத்த சீனு ராமசாமி, முதன் முறையாக ஆக்‌ஷன் த்ரில்லரில் களமிறங்க உள்ளார். 

அதனால் படத்திற்கு இடி முழக்கம் என பெயரிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நேற்று உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக வெளியான அறிவிப்புடன் ஜி.வி.பிரகாஷ் படக்குழு உதயநிதிக்கு அசத்தலான பட்டம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். தற்போது உதயநிதி சினிமாவை தாண்டி அரசியலும் கலக்கி வருவதால் ‘மக்கள் அன்பன்’ என பட்டப்பெயர் கொடுத்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.