பிரமாண்ட இயக்குனர், ஷங்கரின் உதவி இயக்குனரும், தன்னுடைய நண்பருமான அருண் பிரசாத் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கு, மிகவும் உருக்கமாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து திரையுலக பணிகளும் முடங்கியுள்ளது. அதனால், வெவ்வேறு ஊர்களில் இருந்து, சென்னைக்கு வந்து, பல்வேறு திரையுலக பணியில் ஈடுபட்டு வரும், பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

அந்த வகையில், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் அருண் பிரசாந்த் தன்னுடைய சொந்த ஊரான கோவை மாவட்டம் அன்னூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இவர் இன்று தன்னுடைய ஊரில் இருந்து  மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அதி வேகத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது வேகமாக மோதியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் பலமாக அடிபட்டதோடு, அதிக ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவல் தற்போது வெளியாகி திரையுலகை சேர்ந்த  பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்நிலையில் இவருக்கு மிகவும் உருக்கமாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்...

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..
நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். என தெரிவித்துள்ளார்.